பரமக்குடி: பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்குவது வழக்கம். அதைத் தொடர்ந்து தற்போது பரமக்குடி தாலுகாவிற்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் அந்தந்த ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. அதை பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில் நகராட்சி துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். அதைத் தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் வடமலையான், கிருஷ்ணவேணி முத்து பழனி குமார் ஆகியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி,சேலைகளை வழங்கினர். 32, 33 ,34 ஆகிய வார்டுகளில் உள்ள ஆயிரத்தி 394 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
