மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

மேலூர்: மேலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கலந்து கொண்ட காளைகள் சீறி பாய்ந்தன. மேலூர் அருகே வெள்ளலூர் நாட்டு காவல் தெய்வமான வல்லடிகாரர் கோயில் திருவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற இரட்டைமாட்டு வண்டி பந்தயம், பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. சிவகங்கை சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில், பெரிய மாட்டிற்கு 9 கி.மீ மற்றும் சிறிய மாட்டிற்கு 6 கி.மீ எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பெரிய மாடுகளில் 11 ஜோடிகளும், சிறிய மாடுகளில் 23 ஜோடிகளும் போட்டியில் பங்கேற்றன. இதில் முதல் நான்கு இடங்களை பிடித்த காளையின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு தொகையும், கோப்பைகளும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசளித்தது போல், அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டிகளை மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

Related Stories: