போடி, மார்ச் 5: தேனி மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுகவினர் வழங்கி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். போடி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் வீதம் 2 மோதிரமும், பழவகைகளும் பரிசாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
