சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா திருச்செந்தூரில் நாளை பச்சைசாத்தி

திருச்செந்தூர், மார்ச். 3: திருச்செந்தூர் மாசி திருவிழா 6ம் நாளான நேற்று சுவாமி வெள்ளித்தேரிலும், அம்மன் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. நாளை (4ம் தேதி) சுவாமி சண்முகர் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளுகிறார். அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வானங்களில் வீதியுலா நடந்து வருகிறது. 6ம் திருவிழாவான நேற்று காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்தில் வீதியுலா நடந்தது. பின்னர் சுவாமி, அம்மனும் திருவாவடுதுறை ஆதீனம் மண்டகப்படிக்கு சென்றனர். அங்கு மாலை 4 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் பலவகையான அபிஷேகத்தை தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் இரவு 8.30 மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும், வள்ளிஅம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தனர். நாளை (4ம் தேதி) 8ம் திருநாளன்று பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வருகிறார். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காலர்கள் அனிதாகுமரன், செந்தில்முருகன், ராமதாஸ், கணேசன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: