விவசாயிகள் பயன்பெறும் வகையில் கல்லல் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.2.50 கோடியில் வேளாண் அலுவலகம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தகவல்

காரைக்குடி: காரைக்குடி அருகே கல்லல் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. மேலாளர் சுந்தரம் வரவேற்றார். ஊராட்சி ஒன்றியத் தலைவர் சொர்ணம் அசோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நாராயணன், ஆணையர் செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமீனாள் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் சங்கு உதயகுமார், மருதுபாண்டியன், ஆரோக்கியசாமி, முத்தழகு, அழகப்பன், சையதுஅபுதாகீர், ரேவதி நெடுஞ்செழியன், சங்கீத, ராஜமலர், அபிநயா, உஷாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  கூட்டத்தில் ஒன்றியகுழு உறுப்பினர்கள் பேசியதாவது: மருதுபாண்டியன்: குன்றக்குடி ஊராட்சியில் ஆர்.ஓ பிளான்ட் மாற்ற வேண்டும். மருதாஊரணியை மராமத்து பணி செய்ய வேண்டும். சங்கு உதயகுமார்: கல்லல் ஊராட்சி விநாயகர் தெருவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆரோக்கியசாமி:பல்வேறு திட்டங்களின் கீழ் பணி எடுத்தவர்கள் உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அழகப்பன்:கோவிலூர் அரசு பள்ளிக்கு நிதி ஒதுக்கிய மாவட்ட கவுன்சிலருக்கு நன்றி.

இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர். ஊராட்சி ஒன்றியத் தலைவர் சொர்ணம் அசோகன் பேசுகையில், ‘‘சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். உள்ளாட்சிக்கு முதல்வர் புதிய திட்டங்களை அறிவித்து கூடுதல் நிதி ஒதுக்கவுள்ளார்கள். கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் உறுதுணையுடன் உரிய நிதி பெறப்பட்டு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் ஸ்டாண்டு, சந்தை உள்பட பல்வேறு அத்தியாவசிய தேவைகள் மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து அவர்கள் அனுமதியுடன் நிறைவேற்றப்படும். இந்த அலுவலக வளாகத்தில் விவசாயிகளின் நலன் கருதி வேளாண் அலுவலகம் கட்ட 40 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு ரூ.2 கோடியே 50 லட் சத்தில் கட்டிடம் கட்டப்பட உள்ளது. அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுடன் கலந்து பேசி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது’’ என்றார்.

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு திமுக பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு.அசோகன் தலைமையில் உறுப்பினர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Related Stories: