திண்டுக்கல் பகுதியில் சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரின் முக்கிய பகுதியாக ஜி.டி.என் சாலை உள்ளது. இந்த ரோட்டில் கடந்த சில மாதங்களாக ரோடு அகலப்படுத்துவதற்கு டிவைடர் அமைக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் பின்பு புதிய ரோடு அமைக்க பள்ளங்கள் தோண்டி மணல், கற்களை கொட்டி உள்ளனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ரோட்டில் இரண்டு தனியார் பள்ளிகள் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மாணவ ,மாணவியர், வாகன ஓட்டிகள் வந்து செல்லுகின்றனர். புதிய ரோடு பணி பல மாதங்களாக நடைபெறாததால், ரோட்டில் தூசி மற்றும் புழுதி கிளம்பி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பள்ளிகள் துவங்கும் மற்றும் விடும் நேரங்களில் மாணவர்கள் நெரிசில் சிக்கி விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன. மேலும் மாணவ,மாணவியருக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது. அதை போல் சிலுவத்தூர் ரோடு ரயில்வே மேம்பாலம் திறக்கவில்லை. இதனால் அனைத்து வாகனங்களும் இவ்வழியாக செல்வதால் தூசி அதிகமாக ஏற்படுகிறது. திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உடனடியாக புதிய ரோடு பணியை துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: