நெல்லை காவல்துறையில் 268 பேருக்கு பதவி உயர்வு

நெல்லை, மார்ச் 2:  தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்து 15 ஆண்டுகாலம் பணி பூர்த்தியானவர்களுக்கு தலைமைக் காவலராகவும், 10 ஆண்டு காலம் பணி பூர்த்தியானவர்களுக்கு முதல் நிலைகாவலராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி நெல்லை மாவட்டத்தில் 59 ஆண்கள், 13 பெண்கள் உட்பட 72 முதல் நிலை காவலர்கள் தலைமை காவலர்களாக நேற்று பதவி உயர்வு பெற்றனர்.

164 ஆண்கள், 32 பெண்கள் உட்பட 196 இரண்டாம் நிலை காவலர்கள்,  முதல் நிலை காவலர்களாக பதவி உயர்வு பெற்றனர். நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணன் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். பதவி உயர்வு பெற்ற 72 தலைமை காவலர்கள், 196 முதல் நிலை காவலர்களுக்கு நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணன், வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, வருங்காலங்களில் மேலும் சிறப்பான முறையில் பணியாற்ற கேட்டு கொண்டார்.

Related Stories: