திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவில் குடவருவாயில் தீபாராதனை

திருச்செந்தூர், மார்ச் 2: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவில் நேற்று குடவருவாயில் தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா, கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது 5ம் திருநாளான நேற்று சுவாமி, அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையும், அதேவேளையில் பந்தல்மண்டபம் முகப்பில் சுவாமி ஜெயந்திநாதருக்கும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமானும், தெய்வானை அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தனர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நாளை காலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் உருகு சட்டசேவை நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு சுவாமி வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டகப்படிக்கு சேருகிறார். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையானதும் மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வருகிறார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: