18 குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் சுத்தப்படுத்தும் பணி காரைக்கால் புதுச்சேரி பட்ஜெட்டில் உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க சட்டம் இயற்ற வேண்டும் காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

காரைக்கால்: காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் கூறியிருப்பதாவது: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள 5 நகராட்சி மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகள் சுமார் 1300 ஊழியர்கள் மற்றும் 750 ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இதில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கடந்த 5 வருடங்களாக தொடர்ச்சியாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. பிறகு அவ்வப்போது ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. குடிநீர் வழங்குதல், சாலை அமைத்தல், பராமரித்தல், சாக்கடை கட்டுதல், சுகாதார பணிகளை செய்தல், பிறப்பு - இறப்பு - திருமணங்களை பதிவு செய்தல், பதிவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பணிகளை செய்தும், அரசுக்கும் - மக்களுக்கும் பாலமாக இருந்து அரசின் திட்டங்களையும், அதேபோல் மத்திய அரசு அவ்வப்போது அமல்படுத்தும் திட்டங்களை கிராமங்கள் தோறும் அடித்தட்டு மக்கள் வரை கொண்டு செல்லும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வூதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பது ஊழியர்களை வஞ்சிக்கும் செயலாக உள்ளது.

5 ஆண்டுக்கு ஒரு முறை ஏற்றப்பட வேண்டிய சொத்துவரி முறையாக ஏற்றப்படுவதில்லை, அதிலும் கடந்த 2017-18ம் உயர்த்தப்பட்ட சொத்துவரியில் 25% தள்ளுபடி, குப்பை வரி ரத்து என அறிவிப்பு, குடிநீர் வரி குறைப்பு என அறிவிப்பு, குடிமராமத்து நிதி நிறுத்தம், பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் 10 ஆண்டுகளை கடந்தும் அதே பழைய கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே, மற்ற மாநிலங்களில் உள்ளது போலும், மற்ற துறைகளில் உள்ளதுபோல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் அனைத்து வரி வருவாய் களையும் அரசே ஏற்றுக் கொண்டு, வருகிற முழு பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அரசே நேரடியாக ஊதியம் வழங்க வருகிற இந்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள முழு பட்ஜெட்டில் உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க சட்டம் இயற்றி, நிதி ஒதுக்க நடவடிக்கை வேண்டும் என்றார்.

Related Stories: