ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வருசநாடு: கடமலைக்குண்டு கிராமத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்கள் நலனில் அக்கறை காட்டாத ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தங்கபாண்டியன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், கடமலைக்குண்டு ஒன்றிய செயலாளர் போஸ், ஒன்றிக்குழு உறுப்பினர்கள் சுப்புராஜ், ராஜாராம், முருகன், ராமசாமி, பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதுபோல், தேனி நகர் பழைய பஸ் நிலையம் அருகே சிபிஎம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தேனி தாலுகா செயலாளர் தர்மர் தலைமை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: