திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல் நகர் தண்ணீர் தொட்டி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் நேற்று மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. மாமன்ற உறுப்பினர்கள் ஜோதி வாசு தலைமை வகிக்க, மாமன்ற உறுப்பினர்கள் கணேசன், மாரியம்மாள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மக்களை பாதிக்கின்ற ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கோஷமிட்டனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி, நகர செயலாளர் அரபு முகமது, மாவட்டக்குழு உறுப்பினர் ஆஸாத், நகர்க்குழு உறுப்பினர் கார்த்திக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் திண்டுக்கல் என்எஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் அஜாய், ஒன்றியக்குழு உறுப்பினர் புனிதநேரு, கிளை செயலாளர்கள் பழனிச்சாமி, வனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
