போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் கரூரில் 15 நிமிட வாகன நிறுத்த போராட்டம்

கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கம், மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன சங்கம் ஆகியவற்றின் சார்பில் 15 நிமிட வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றது. கரூர் பேரூந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். சிபிஐ எம் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, சிஐடியூ நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சரவணன், பாலசுப்ரமணியன், ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட நிர்வாகி சதீஸ் உட்பட ஏராளமானோர் இந்த 15 நிமிட வாகன நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டு வாகனங்களை நிறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார். அநியாய அபராதம் விதிக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். 15 ஆண்டுகள் கடந்த வாகனங்களை ஒழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஆன்லைன் அபராதத்தை நீக்க வேண்டும். பெட்ரோல், டீசல், காஸ், டோல்கேட் கட்டணம் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

Related Stories: