வீரப்பூர் திருவிழாவை முன்னிட்டு கரூரில் இருந்து 55 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்

கரூர்: வீரப்பூர் திருவிழாவை முன்னிட்டு கரூரில் இருந்து 55 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூர் கோயில் மாசி மகத் திருவிழா பிப்ரவரி 20ம்தேதி துவங்கியது. வரும் மார்ச் 1ம்தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான படுகளம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கரூரில் இருந்து வீரப்பருக்கு கடந்த இரண்டு நாட்களாக 55 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், கரூர் மண்டலத்திற்கு உட்பட்ட முசிறியில் இருந்தும் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பிப்ரவரி 27 மற்றும் 28ம்தேதி ஆகிய இரண்டு நாட்கள் வீரப்பூர் கோயிலில் வேடபரி, திருத்தேரோட்டம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, நாளை (28ம்தேதி) வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமராவதி ஆற்றில், அதிக பரப்பளவு கொண்ட ஆண்டாங் கோயில் தடுப்பணையில் தற்போது தண்ணீர் முழு அளவில் இருப்பதால் மீன் வளர்ப்புக்கு ஏற்ற சூழலில் உள்ளது.

Related Stories: