விண்ணப்பிக்க அழைப்பு 6ம் தேதி தேரோட்ட விழா கரூரில் அதிக பரப்பளவு கொண்ட ஆண்டாங்கோயில் தடுப்பணையில் விடப்படுமா வளர்ப்பு மீன் குஞ்சுகள்

கரூர்: கரூரில் அதிக பரப்பளவு கொண்ட ஆண்டாங்கோயில் தடுப்பணையில் வளர்ப்பு மீன் குஞ்சுகள் விட வேண்டும் என்று பொதுமக்கள், மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மாயனூரில் உள்ள காவிரி தடுப்பணை, கதவணையில் மீன்வளத்தை அதிகப்படுத்துவதற்காக கட்லா, லோகு, மிருகால், புல் கெண்டை , நாட்டு விரால் என சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மீன் குஞ்சுகள் வளர்ப்புக்காக விடப்பட்டது. இவ்வாறு விடப்பட்ட மீன் குஞ்சுகள் மாயனூர் காவிரி கதவணையில் நல்ல நிலையில் வளர்ந்து வருகிறது. இவ்வாறு வளர்வதால் அப்பகுதியில் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் சுமார் 500 க்கும் அதிகமான மீனவர்களுக்கு மீன்வளம் அதிகப்படுவதால் தரமான கிடைக்கும்.

பொதுமக்களுக்கும் பற்றாக்குறை இல்லாமல் மீன்கள் வாங்குவதற்கு வசதியாக இருக்கும். இதேபோல் அமராவதி ஆற்றில், அதிக பரப்பளவு கொண்ட ஆண்டாங் கோயில் தடுப்பணையில் தற்போது தண்ணீர் முழு அளவில் இருப்பதால் மீன் வளர்ப்புக்கு ஏற்ற சூழலில் உள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் நீளம் கொண்டது, ஆண்டாங்கோயில் தடுப்பணையாகும். மேலும் காவிரி ஆற்று மீனை விட, அமராவதி ஆற்றுப் பாசனத்தில் உள்ள மீன் அதிக சுவை உள்ள மீனாக இருக்கும் என்று பொதுமக்களால் கூறப்படுகிறது. எனவே மீன் வளத்தை அதிகப்படுத்துவதற்காகவும், தேவையே பூர்த்தி செய்யும் வகையிலும் கட்லா, லோகு, மிருகால், புல் கெண்டை, நாட்டு விரால், நாட்டு பாறை ஆகிய மீன் குஞ்சுகளை அமராவதி ஆற்றில் வளர்ப்புக்கு விட்டால், சுமார் 5 மாதத்திற்கு பின் மீன்கள் ஒரு கிலோ முதல் 3 கிலோ வரை மீன் வளரும்.

பகுதியிலும் மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் பொது மக்களுக்கும் தரமான சத்தான மீன்கள் குறைவான விலையும் குறைவாக கிடைக்கும். எனவே மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும், மீனவர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories: