பூந்தமல்லி: திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர், பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். நேற்று தொழில் தொடர்பாக வெளியே சென்று விட்டு அயனம்பாக்கத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். மதுரவாயல் அடுத்த வானகரம் அயனம்பாக்கம் சாலையில் சென்றபோது லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது லாரி பைக் மீது உரசியது.
