கறம்பக்குடி அருகே திருந்திய நெல் சாகுபடியில் நெல் நடவு பணிகள் பற்றிய செயல் விளக்கம் கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி

தாலுகா வேளாண் வட்டாரத்தில் உள்ள தீத்தானிப்பட்டி கிராமத்தில் புஷ்கரம் வேளாண் கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவிகள் திருந்திய நெல் சாகுபடியில் இயந்திரம் மூலம் நெல் நடவு பணிகள் பற்றி செயல்முறை மூலம் நடவு பணிகளை செய்து காண்பித்தனர். விவசாயி முருகேசன் என்பவரது வயலில் கறம்பக்குடி வட்டார துணை வேளாண்மை அலுவலர் மகாலிங்கம் முன்னிலையில் செம்மை நெல் சாகுபடி முறையில் இயந்திரம் மூலம் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் நடவு செய்தனர். இந்த நடவு பணியில் மாணவிகளான புவிதா, ராகவி, சரஸ்வதி, செல்பனா ஜெனிபர், ஷாலினி, சிந்து மதி, சிவானி, ஸ்னேகா,  தர்ஷினி, சினேகா ஆகிய மாணவிகள் இந்த நடவு பணிகளை இயந்திரம் மூலம் வயலில் விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: