அக்கச்சிப்பட்டி ஊராட்சியில் குளத்தில் மீன் பிடிக்க சிறுவர்கள் ஆர்வம்

கந்தர்வகோட்டை,பிப்.21: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சியில் உள்ள குளத்தில் தினசரி மக்கள் குளித்தும்,  துணி துவைத்தும் வருகிறனர்.  இந்த குளத்தில் தண்ணீர் குறைந்துள்ள நிலையில் இப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் குளத்தில் தூண்டில் போட்டு மீன் பிடித்து வருகிறார்கள். அவர்கள் கூறும்போது தூண்டில் போட்டு மீன் பிடிப்பது என்பது மகிழ்ச்சியான சம்பவம். சிறந்த பொழுது போக்கு எனவும் கூறினர். பெற்றோர்கள் கூறும் போது, செல்போனில் விளையாடாமல் பழைய முறையில்

குழந்தைகள் மீன் பிடிப்பதும், கோலிக்குண்டு விளையாடுவதும், பம்பரம் விளையாடுவதும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினர்.

Related Stories: