சின்னமனூரில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

சின்னமனூர், பிப். 21: சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு மாணவர்களுக்கான குறைதீர் கற்பித்தல் பயிற்சி மேற்பார்வையாளர் சகாயராஜ் தலைமையில் சின்னமனூரில் நேற்று நடைபெற்றது. இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்து இந்த பயிற்சியை துவக்கி வைத்தார். இந்த பயிற்சியில் சின்னமனூர் எஸ்கேஏ மேல்நிலைப்பள்ளியில் தன்னார்வலர்கள் 82 பேர், கேவிஏ மேல்நிலைப்பள்ளியில் தன்னார்வலர்கள் 33 பேர் என 115 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஆசிரியை ரெஜினாமேரி, சங்கரி, கேசவமூர்த்தி, அமுதா, ஆசிரியர் பயிற்றுநர் பாக்கி மரியானா நான்சி, முத்துப்பாண்டி, லூக்கா, பாக்கி ஜெயந்தி, சாமுண்டீஸ்வரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் மாணவர்களின் கற்றல் நிலைக்கு ஏற்ப அவர்களின் திறன்களை மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Stories: