வேதாரண்யம், அக்.1: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி அவை கூடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் குகன் முன்னிலை வகித்தார். இளநிலை எழுத்தர் குமார் வரவேற்றார்.கூட்டத்தில், பேரூராட்சித் தலைவர் செந்தமிழ்ச்செல்வி (அதிமுக) கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுகவினரை தோற்கடித்தனர். கூட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சி 7வது வார்டில் அரசுக்கு சொந்தமான வண்டிப்பாதை இடத்தில் பேரூராட்சி நில வாடகை கடைகள் இருந்தது. இந்த கடைகள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்ததாக கடைகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது. பின்பு அந்த இடத்தில் பேரூராட்சி தலைவர் கூட்ட தீர்மானம் இல்லமால் நள்ளிரவில் கம்பி வேலி அமைத்துள்ளார்.
