இரு சிறுமிகள் பலியான விவகாரம்: பண்ணைப்புரம் செயல் அலுவலர், பொறியாளர் சஸ்பெண்ட்

உத்தமபாளையம்,அக். 1: உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டு பெண்கள் பொது கழிவறையின் ஸ்லாப் பழுதானதை அறியாமல், அதன் மேல் ஏறி விளையாடிய போது ஸ்லாப் உடைந்ததில் நிகிதா , சுப என்ற சிறுமிகள் உள்ளே விழுந்து நேற்று முன்தினம் பலியான சம்பவம் தேனி மாவட்டத்தில் பெ ரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, உத்தமபாளையம் ஆர்டிஓ தலைமையில் விசாரணை செய்யப்பட்டது.

இதையடுத்து தற்போது பண்ணைப்புரம் பேரூராட்சி செயல் அலுவலராக உள்ள முனுசாமி உதவி பொறியாளர் வீர மணி ஆகிய இருவரையும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தற்காலிக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: