விலையில்லா சைக்கிள் வழங்கல்

கொடைக்கானல், அக். 1: கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை, மன்னவனூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

ஒன்றிய தலைவர் ஸ்வேதா ராணி கணேசன் தலைமை வகிக்க, துணை தலைவர் முத்துமாரி சுரேஷ் பாண்டி முன்னிலை வகித்தார். விழாவில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, மாவட்ட பிரதிநிதி சுரேஷ் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: