நாகப்பட்டினம்,செப்.30: சீருடை தான் நம்மை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என எஸ்பி ஜவஹர் பேசினார். ஊர்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்து. மண்டல தளபதி ஆனந்த் வரவேற்றார். எஸ்பி ஜவஹர் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஊர்க்காவல் படையினர் பணி மிகவும் பாராட்டத்தக்கது ஆகும். போலீசாருக்கு நண்பர்களாக இருந்து செயல்படுகின்றனர். சீருடைதான் நம்மை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும். எனவே சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். இதை தொடர்ந்து ஊர்க்காவல் படையினர் அணிவகுப்பு மரியாதையை எஸ்பி ஏற்றுக்கொண்டார்.
