வத்தலக்குண்டு பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழா

வத்தலக்குண்டு, செப். 29: வத்தலக்குண்டுவில் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் திங்கட்கிழமை துவங்கி வியாழக்கிழமை வரை நடந்தது. அதில் மாவிளக்கு, பொங்கல், அக்னிச்சட்டி, முளைப்பாரி ஊர்வலம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று கோயிலில் மறுபூஜை நடந்தது. இதையொட்டி பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாடார் உறவினர் தலைவர் பொன்ராஜ் தலைமையில் திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Stories: