பாளையில் மனைவியை கத்தியால் குத்தியவர் கைது

நெல்லை, செப். 28: பாளையில் மனைவியை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார். பாளை கோரிப்பள்ளம் மாத்தியூ தெருவை சேர்ந்தவர் ஐசக் சாமுவேல் (29). கட்டிட தொழிலாளியான இவர், அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி சித்ராவுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று போதையில் வந்த ஐசக் சாமுவேல், சித்ராவிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்த சித்ராவை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சித்ரா கொடுத்த புகாரின் பேரில், பாளை போலீசார் வழக்கு பதிவு செய்து ஐசக் சாமுவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: