சின்னாளபட்டி அருகே கரியன்குளத்தில் திடீரென்று பச்சை நிறமான தண்ணீர் : அதிகாரிகள் ஆய்வு

சின்னாளபட்டி, செப். 27: சின்னாளபட்டி மற்றும் அம்பாத்துரை கிராம ஊராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கரியன்குளத்தில் திடீரென்று தண்ணீர் பச்சை நிறமாக மாறி மீன்கள் செத்து மிதந்ததால் அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்ய கொண்டு சென்றனர். சின்னாளபட்டியிலிருந்து அம்பாத்துரை செல்லும் வழியில் தேவி கருமாரியம்மன் கோவில் எதிரே உள்ளது. சுமார் 5.39ஹெக்டேர் (14 ஏக்கர்) நீர் பாசனம் பரப்பளவுள்ள இக்குளத்தில் தற்போது மழைநீர் தேங்கியுள்ளது. அம்பாத்துரை ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளத்தில் மூன்று ஆழ்துளை கிணறுகளை அமைத்து அதன்மூலம் குடிதண்ணீர் எடுத்து விநியோகம் செய்து வருகிறது. குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்பதால் குளம் மாசடைந்து வருகிறது.

மேலும் தற்போது குளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் பச்சை நிறமாக மாறி மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதால் தொற்று நோய் பரவு அபாயமும் உள்ளது. இதனால் சுற்றுசூழல் மாசடையும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் தண்ணீர் ஆராய்ந்து மீன்கள் இறந்தது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் குளத்தில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறத்தபடுத்தி குளத்தை பராமரிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்திருந்தனர். இந்நிலையில் குளத்தின் தண்ணீர் பச்சை நிறமாக மாறியது குறித்து ஆராய்வதற்கு அதிகாரிகள் சிலர் குளத்திலிருந்து தண்ணீரை சேகரித்து சென்றுள்ளனர்.

Related Stories: