கமுதியில் இருந்து மதுரைக்கு கடத்திய 50 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை

மானாமதுரை, செப்.27: கமுதியில் இருந்து மதுரைக்கு கடத்தி செல்லப்பட்ட 50 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் உள்பட இருவரிடம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மானாமதுரை புதுபஸ்ஸ்டாண்டு அருகே உள்ள நான்கு சக்கர வாகன பழுதுநீக்கும் ஒர்க்ஷாப்பில் நேற்று பகல் 12 மணியளவில் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் வாகனம் ஒன்று நிற்பதாக மானாமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மானாமதுரை போலீசார் உடனடியாக கீழமேல்குடி ரோட்டில் உள்ள அந்த ஒர்க்ஷாப்பிற்கு சென்ற போது சரக்குவேனில் 50 மூட்டைகள் பிளாஸ்டிக் சாக்கில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக டிரைவரிடம் விசாரித்த போது கமுதியை சேர்ந்த லிங்கம் என்பவர் மதுரைக்கு கொண்டு செல்லுமாறு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இது தொடர்பாக வாகனத்துடன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கமுதி அருகே வேளாங்குளத்தை சேர்ந்த தங்கவேல் மகன் விக்னேஷ்(23), வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் தனசேகரன் மகன் கார்த்திக்(38) ஆகிய இருவரையும் பிடித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related Stories: