ஒரத்தூரில் மக்கள் நேர்காணல் முகாமில் 54 பேருக்கு நலத்திட்ட உதவி

நாகப்பட்டினம், செப்.24: ஒரத்தூரில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 54 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. உதவி ஆணையர் ( கலால்) ராஜன் தலைமை வகித்தார். தாசில்தார் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். ரூ.4.50 லட்சம் மதிப்பில் வீட்டுமனை பட்டா, முதியோர் விதவை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் பலன் தரும் பழ விதைகள் மற்றும் பழம் தரும் மரக்கன்றுகள், வேளாண்மை துறை சார்பில் மருந்து தெளிப்பான், நெல் விதை மூட்டைகள் ஆகிய நலத்திட்ட உதவிகள் 54 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தனி வட்டாட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) ரு முத்துமுருகேசன்பாண்டியன் நன்றி கூறினார்.

Related Stories: