திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

திருப்புத்தூர், செப். 20:  திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோகபைரவர் கோயிலில் நேற்று முன்தினம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெற்றது. திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மதியம் யோகபைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து யோகபைரவர் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அஷ்டமி பூஜையை முன்னிட்டு திருப்புத்தூர் மற்றம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்தும், தேங்காய், பூசணிக்காய், எழும்பிச்சம்பழம், மண்விளக்கு ஆகியவற்றில் தீபம் ஏற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியும், வேண்டுதல் வைத்தும் வழிபாடு செய்தனர்.

Related Stories: