ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியில் குணங்குடியார் தமிழ் பேரவை விழா

உத்தமபாளையம், செப். 10: உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியில் குணங்குடியார் தமிழ்ப்பேரவை தொடக்க விழா நடந்தது. உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி தமிழ்த்துறை சார்பில் குணங்குடியார் தமிழ்ப் பேரவையின் துவக்க விழா நடைபெற்றது. துவக்க விழாவில் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத்தலைவர் அப்துல் சமத் சிறப்புரை ஆற்றினார். கல்லூரிமுதல்வர் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். தமிழ் துறையின் தலைவர் பெரியமுருகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். பேராசிரியர அப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார். ‘நயம் பட உரை’ என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்றினார். முடிவில் மாணவி ஹர்ஷினி நன்றி கூறினார்.

Related Stories: