தேவகோட்டையில் 2 நாட்களில் 7 பேர் பாம்பு கடித்து காயம்: ஒருவர் சாவு

தேவகோட்டை, செப்.6:  தேவகோட்டையில் கடந்த 2 நாட்களாில் பாம்பு கடித்த 8 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஒருவர் பலியானார். தேவகோட்டை தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் பருவமழையை எதிர்நோக்கி கிராம மக்கள் விவசாய பணியை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றர். இவ்வேளையில் வயல்வெளிகளில் அதிக அளவு பாம்புகள் திரிகின்றன. இவ்வாறு விவசாய பணியில் ஈடுபடும்போது விசாலயன்கோட்டையைச் சேர்ந்த அழகு(60) என்பவரை பாம்பு கடித்தது. தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் அவர் இறந்தார். இதேபோல் புளியால் வள்ளி(65), வேப்பங்குளம் வளர்மதி(45), தேரளப்பூர் பிரியங்கா(22), நெட்டேந்தல் கணேசன்(63), சின்ன உஞ்சனை திருநாவுக்கரசு(54), தேவகோட்டை எம்.எம்.நகர் தியாகராஜன்(60), தேவகோட்டை கல்லுப்பட்டியார் வீதி பிரபு(33) ஆகியோர் பாம்பு கடித்ததில் பாதிக்கப்பட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: