பள்ளி மாணவியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

புதுச்சேரி, செப். 3: புதுவையில் பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. புதுவை வம்பாகீரப்

பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் என்ற பாவாடை (30). கூலி தொழிலாளி. ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவம் 2016ல் நடந்தது. இது குறித்த புகாரின் பேரில் கடத்தல், குழந்தை திருமணம், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ் என்ற பாவாடையை கைது செய்தனர். இவ்வழக்கு புதுச்சேரி தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்ததை அடுத்து, தலைமை நீதிபதி செல்வநாதன் நேற்று தீர்ப்பு வழங்கினார். குற்றவாளி சதீஷ் என்ற பாவாடைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் அரசு தரப்பில் பாலமுருகன் ஆஜரானார்.

Related Stories: