மூணாறு அருகே ஏலக்காய் குடோவுனில் 16 அடி ராஜநாகம் மீட்பு

மூணாறு, ஆக. 26:மூணாறு அருகே ஏலக்காய் குடோவுனில் 16 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் பிடிப்பட்டது. கேரள மாநிலம் மூணாறை அடுத்த  பள்ளிவாசல் ஊராட்சிக்குட்பட்ட குறிசுபாறை அருகேயுள்ளது கோட்டப்பாறை பகுதி. இந்த பகுதியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான ஏலக்காய் குடோவுன் உள்ளது. நேற்று இந்த குடோவுனில் வேலை பார்த்த தொழிலாளர்கள் ராஜநாகம் பாம்பை பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வந்த வனக் காவலர்கள் மற்றும் பாம்பு மீட்புக் குழுவினர் 2 மணிநேர போராட்டத்திற்கு பின் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். 16 அடி நீளமுள்ள ராஜநாகம் பாம்பிற்கு 7 வயது இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: