வரத்து அதிகரிப்பால் செண்டு மல்லி விலை வீழ்ச்சி

நிலக்கோட்டை, ஆக.23: தொடர் மழை காரணமாக செண்டு மல்லி வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நிலக்கோட்டை பகுதியில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய அனைத்து பூக்களும் அதிகமாக பயிர் செய்யப்பட்டு வருகிறது. எனினும் இந்தாண்டு சராசரி அளவைவிட கூடுதலான மழை பெய்ததாலும் கடந்த மாதம் முதல்  தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருவதாலும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செண்டுமல்லி பூக்கள் வரத்து அதிகமாகியுள்ளது. இதனால் கடந்த 3 தினங்களாக நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு செண்டு மல்லி பூக்கள் வரத்து அதிகரித்து குவிவதால் விலை வெறும் 20 முதல் 25 ரூபாய் மட்டுமே போகிறது. கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு பராமரிப்புகள் செய்து வளர்த்து அறுவடை கூலிக்கு கூட கட்டாத விலைக்கு விற்பனையாவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories: