6 முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு நாளை முதல் பருவத்தேர்வு தொடக்கம்

ஈரோடு, ஆக.10:  ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் பருவத்தேர்வுகள் தொடங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு முதல் இடைப்பருவத்தேர்வு நாளை 11ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. முதல்நாளான நாளை தமிழ் தேர்வும், 12ம் தேதி ஆங்கிலம், 16ம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், இயற்பியல், வணிகவியல் ஆகிய தேர்வுகளும், 17ம் தேதி கணிதம், 18ம் தேதி அறிவியல், 22ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. 23ம் தேதி பிளஸ் 2 கணினி அறிவியல், கணினி பயன்பாடு, கணினி தொழில்நுட்பம், சிறப்பு தமிழ் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. பிளஸ் 2, 10ம் வகுப்பு, 6ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு காலையிலும், பிளஸ் 1, 9ம் வகுப்பு, 7ம் வகுப்புகளுக்கு மதியமும் தேர்வு நடக்கிறது என ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: