ஈரோடு மாவட்டத்தில் 2 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

ஈரோடு, ஆக. 9:  தமிழகத்தில் 76 போலீஸ் டிஎஸ்பிக்களை பணியிடம் மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டிஎஸ்பியாக பணியாற்றிய ஜெயபாலன், புதிய பணியிடம் வழங்கப்படாமல் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். சத்தியமங்கலம் டிஎஸ்பியாக காத்திருப்பு பட்டியலில் இருந்த சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். ஈரோடு மாவட்ட சிறப்பு இலக்கு படை டிஎஸ்பியாக பணியாற்றிய ஜாகிர்உசேன், மதுரை சரகதத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அந்த பணியிடத்திற்கு நீலகிரி மாவட்ட குற்றப்பதிவேடுகள் பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றிய சசிக்குமார் நியமிக்கப்பட்டார். அதேபோல், ஈரோடு மாவட்ட சிறப்பு இலக்கு படையில் ஏற்கனவே காலியாக இருந்த டிஎஸ்பி பணியிடத்தில் காத்திருப்பு பட்டியலில் இருந்த பாலசந்திரன் நியமிக்கப்பட்டார்.

Related Stories: