முத்துப்பேட்டை வீர மகா காளியம்மன் கோயிலில் 23ம் ஆண்டு ஆடி திருவிழா

முத்துப்பேட்டை, ஆக.8: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை சந்தைக்கு பின்புறம் உள்ள வீரமகா காளியம்மன் கோவிலில் 23ம் ஆண்டு ஆடிப்பூர பெருந்திருவிழா கடந்த 28ந் தேதி துவங்கியது. 12நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினந்தோறும் அந்தந்தப் மண்டகப்படி உபயதாரர்கள் சார்பில் பல்வேறு நிகழச்சிகள் நடைபெற்று வந்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிலையில் நிறைவு நாளான நேற்று முத்துப்பேட்டை- மன்னார்குடி சாலையில் உள்ள சித்தேரி குளத்திலிருந்து நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அதனைதொடர்ந்து பல்வேறு காவடிகள் எடுத்து ஊர்வலமாக குமரன் பஜார் பழைய பேரூந்து நிலையம் திருத்துறைப்பூண்டி சாலை பங்களா சாலை உள்பட முக்கிய பகுதி வழியாக எடுத்து கோயிலுக்கு வந்தனர். பின்னர் கோயிலில் மாவிளக்கு போடுதல், விஷேச அபிஷேக ஆராதனை மற்றும் அருட் பிரசாதம் வழங்குதல், கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் இரவு மின் அலங்காரத்துடன் அம்பாள் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Related Stories: