மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு

கொள்ளிடம், ஆக. 8: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கரையோர கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்கள் வெள்ள நீர் சூழ்ந்து துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொள்ளிடத்தில் அதிக அளவு நீர்வரத்து வருவதால் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹித்தேஷ்குமார் மக்வானா மற்றும் மாவட்ட கலெக்டர் லலிதா ஆகியோர் நேற்று நேரில் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து அளக்குடி, ஆச்சாள்புரம் ஆகிய இடங்களில முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை பார்வையிட்டு அங்கு தயார் செய்யப்பட்டு வரும் உணவு தரமாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். மாவட்ட திட்ட இயக்குனர் முருகண்ணன், ஆர்டிஓ அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், மயிலாடுதுறை காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி பிடிஓ சரவணன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: