வரலட்சுமி விரதம் பத்மாவதி தாயாருக்கு 50,000 வளையல் அலங்காரம்

போடி, ஆக. 6: ஆடி மாதம் வரலட்சுமி விரத தினத்தை முன்னிட்டு அம்மன் கோயில்களில் வளையல் அலங்காரம் செய்து பூஜை நடத்துவர். போடியில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள பத்மாவதி தாயாருக்கு 50 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது.அம்மன், பந்தல், நிலை மாலை, திருவாச்சி ஆகியவை வளையல்களால் அமைக்கப்பட்டிருந்தன. சுமங்கலிகள் நீண்ட ஆயுள் பெறவும், திருமணமாகாத பெண்கள் திருமணமாகவும், குழந்தை பாக்கியம் பெறவும் பெண்கள் வளையல் படைத்து பூஜையில் பங்கேற்றனர்.அம்மனுக்கு திருமஞ்சனம், மகா தீபாராதனை காட்டபட்டு பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வளையல் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: