ஒன்றிய அரசை கண்டித்து காங்.,கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஆக.6: ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து நாமக்கல், குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல்லில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் வீரப்பன், செல்வராஜ், சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; வேலையில்லா திண்டாட்டத்ததை போக்க வேண்டும்; ஜி.எஸ்.டி., குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், நாமகிரிபேட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் புள்ளியப்பன், நகர தலைவர் மோகன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கோபால், மாநில ஓ.பி.சி., துணைத்தலைவர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். குமாரபாளையம்: குமாரபாளயைத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, நகர தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்து பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், நகர துணைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட துணைத்தலைவர் சக்திவேல், தங்கராஜ், பார்த்தசாரதி, கோகுல்நாத், மனோகரன், ஆதிகேசவன், ஆறுமுகம், மாரிமுத்து மற்றும் மகளிரணியினர், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: