காஞ்சிபுரத்தில் ஆதி காமாட்சி அம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை திரளான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதி காமாட்சி ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் ஆடி பூரத்தை ஒட்டி ஊஞ்சல் சேவையும், லட்ச தீபமும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ள, ஆதி காமாட்சி கோயில் என அழைக்கப்படும், ஆதி காமாட்சி, ஆதிபீடா பரமேஸ்வரி, காளிகாம்பாள் கோயிலில் ஆடி மாதம் ஆடி பூரத்தை ஒட்டி லட்ச தீபம் நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு லட்ச தீப நிகழ்ச்சியில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.

லட்ச தீபத்தை ஒட்டி ஆதி பீடா பரமேஸ்வரி, காளிகாம்பாள் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்து கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து பின் கோயில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.  சிறப்பு அலங்காரத்தில் எழுதருளில் ஆதி காமாட்சி அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழு செய்திருந்தனர்.

Related Stories: