ஜெயங்கொண்டம் அருகே பெண் உள்பட 2 பேர் குண்டாசில் கைது

ஜெயங்கொண்டம், ஆக. 3: ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் பொட்ட கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் அன்புமணி மனைவி வசந்தா (51). இவர் கடந்த 2018 முதல் 2022 வரை பல்வேறு வகை சாராய வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர். தொடர்ந்து இவர் சாராய வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா கைது செய்து சிறையில் அடைத்தார். அதனை தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஏடிஎஸ்பி காமராஜ், எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பரிந்துரையின் பெயரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வசந்தாவை ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெண்மான் கொண்டான் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ராமு (எ) ராமராஜன் (எ) இளவரசன் (43). இவரை விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) கவிதா கைது செய்தார். மேலும் இவர் கடந்த 2015ம் ஆண்டு ஒரு சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சிறை சென்று தற்போது பெயிலில் வந்துள்ளார். தொடர்ந்து இதுபோல் பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் இவரை ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலை கதிரவன் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பரிந்துரையின் பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: