திருப்புத்தூரில் சிலைக்கு மாலை

திருப்புத்தூர், ஜூன் 25: திருப்புத்தூர் அருகே கவிஞர் கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவிற்கு, இலக்கிய பேரவை தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்.பி கார்த்தி சிதம்பரம், பேருந்து நிறுத்தம் அருகே நிறுவப்பட்டுள்ள கண்ணதாசனின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத்தலைவர் கணேசன், கீழச்சிவல்பட்டி நகர் தலைவர் அழகுமணிகண்டன், வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சேதுமெய்யப்பன், முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: