கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்

வேதாரண்யம், ஜூன் 25: கோயில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று பூசாரிகள் பேரமைப்பு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேதாரண்யம் அடுத்த வாய்மேடு மேற்கு பின்னையடி மாரியம்மன் கோயிலில் பூசாரிகள் பேரமைப்பு ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஒன்றிய பொருளாளர் காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட பூசாரிகள் பேரமைப்பு மாநில துணை தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினார். ஒன்றிய துணை தலைவர் சிங்காரவேல், நகர தலைவர் ரத்தினம், நகர செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நதி நீர் நிலைகளை பாதுகாத்து வரும் தலைமுறைக்கு வழங்கிட வேண்டும். வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் கோயில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் நல வாரியம் பெற வருவாய் சான்று பெறுவதில் அரசு விதி விலக்கு அளிக்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரி மறைவுக்குப்பின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பூஜை செய்யும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் ரூ.10,000 வழங்கிட வேண்டும். வரும் ஜூலை 3ம் தேதி வேலூரில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு நமது பகுதியில் இருந்து அதிகம் பேர் கலந்து கொள்வது என உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: