எஸ்.பி. ஆபீசில் மக்கள் குறைதீர் கூட்டம்

நெல்லை, ஜூன் 9: நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் முதல்முறையாக நேற்று நடந்தது.  தமிழக அரசு அனைத்து மாவட்ட எஸ்.பி. அலுவலகங்கள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இரு வாரங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் முதல்முறையாக மாவட்ட தலைமையக ஏடிஎஸ்பி மதிவாணன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. இதில் பங்கேற்ற ஏராளமானோர் ஏடிஎஸ்பியிடம் மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட ஏடிஎஸ்பி, இவற்றின்மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் அடுத்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இம்மாதம் 22ம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்தார்.

Related Stories: