பாபநாசத்தில் பெரியார் நகர்வு புத்தக சந்தை தொடக்க விழா

பாபநாசம், ஜூன் 9: பாபநாசத்தில் பெரியார் நகர்வு புத்தக சந்தை தொடக்க விழாவில் எம்.பி., கல்யாணசுந்தரம் கலந்துகொண்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பாபநாசம் நகர, ஒன்றிய திக சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே பெரியார் நகர்வு புத்தக சந்தை விற்பனை தொடக்க விழா ஒன்றியத் தலைவர் பூவானந்தம் தலைமையில் நடந்தது. நகர செயலாளர் வீரமணி வரவேற்றார். ஒன்றிய செயலாளர் நாசர், பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பகுத்தறிவு கழக நிர்வாகிகள் திருஞானசம்பந்தம், மோகன், மாவட்டத் தலைவர் நிம்மதி, செயலாளர் துரைராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.பியுமான கல்யாணசுந்தரம் கலந்துகொண்டு முதல் புத்தக விற்பனையை தொடங்கி வைத்து பேசுகையில், பெரியாரின் கொள்கைகள் கோட்பாடுகள் குறித்தும், இன்றைய இளைஞர்கள் தினசரி புத்தகம் வாசிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா, விசிக மாவட்ட செயலாளர் உறவஅழகன், இளைஞரணி செயலாளர் இலனின் உள்பட தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நகர தலைவர் இளங்கோவன் நன்றி கூறினார்.

Related Stories: