ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் தேரோட்டத்திற்கு தயாராகும் தேர்

திருவாடானை, ஜூன் 8: திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி இரண்டு ஆண்டுக்கு பிறகு தேரோட்டத்திற்கு தேர் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆதிரத்தினேஸ்வரர் சமேத சிநேகவல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் வைகாசி விசாக திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிறப்பு நிகழ்வாக வருகிற 11ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தேரோட்டத்திற்காக தேர் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories: