பண்டாரவாடை ஊராட்சியில் பயணியர் நிழற்குடை கட்டுமான பணி
பாபநாசம், ஜூன் 6: பாபநாசம் அருகே பண்டாரவாடை ஊராட்சியில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் 2021-22ன் கீழ் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியினை பாபநாசம் தொகுதி எம்எல்ஏவும், மமக மாநில தலைவருமான ஜவாஹிருல்லா பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். உடன் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி அய்யாராசு, தமுமுக, மமக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ரஹ்மத் அலி, திமுக பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், ஒப்பந்ததாரர் திருமலை நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
