மேலப்பாளையம் வார்டுகளில் சுகாதார வசதி மேம்பாடு மேயரிடம் கவுன்சிலர்கள் மனு

நெல்லை, மே 30: மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 46, 48வது வார்டுகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் மேயரிடம் வார்டு கவுன்சிலர்கள் மனு அளித்தனர். நெல்லை மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் ரம்ஜான் அலி, 48வது வார்டு கவுன்சிலர் ஆமீனா பீவி ஆகியோர் நெல்லை மேயர் பி.எம்.சரவணனிடம் அளித்த மனு: 46, 48வது வார்டுகளில் கூடுதலாக குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். கழிவுநீரோடைகளில் ஏற்படும் அடைப்பை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். 48வது வார்டுக்கு உட்பட்ட பீடி தொழிலாளர் காலனி, கொக்கட்டிகுளம், ரகுமான்தாஜ்நகர் பகுதிகளில் போதிய மின்கம்பங்கள் அமைத்து மின்விளக்கு வசதிகளை அதிகரிக்க வேண்டும். மேலும் பள்ளிவாசல்களின் மையவாடி பகுதிகளிலும் மின்கம்பங்கள் அமைத்து மின்வசதி ஏற்படுத்த வேண்டும். 48வது வார்டில் ரகுமானியாபுரம், அசன்தரகர் தெரு, நபிநகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: