கம்பம் உழவர்சந்தை அருகே ஆக்கிரமிப்பு கடைகளால் அல்லல் அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை

கம்பம், மே 26: கம்பம் நகராட்சியில் உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு தினம்தோறும் ஏராளமான பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்காக வருகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 40 டன் காய்கறிகள் கம்பம் உழவர் சந்தையில் விற்பனை ஆகிறது. இந்த உழவர் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களை குறிவைத்து உழவர் சந்தையை சுற்றிலும் ஏராளமானோர் ரோட்டோரங்களில் அன்றாடம் கடை விரித்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் நிரந்தர கடைகள் அமைக்க தொடங்கியுள்ளனர். இதனால் உழவர் சந்தையை ஒட்டி உள்ள ஆண்கள் கழிப்பறை பாதையை ஆக்கிரமித்து காய்கறி கடைகள் அமைத்துள்ளனர். இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் சிறுநீர் கழிக்க இடமில்லாமல் பெரிதும் திண்டாடி வருகின்றனர். இப்பகுதியில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதை தடுக்க வேண்டி பொதுமக்கள் பலரும் நகராட்சிக்கு புகார் அளித்துள்ளனர். இதுபோன்ற கடைகளை உடனே அப்புறத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: