அந்தியூர் பேரூராட்சியில் துணைதலைவராக 8-வது வார்டு திமுக கவுன்சிலர் பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு

அந்தியூர், மே 26: ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி துணைத்தலைவருக்கான மறைமுகத் தேர்தல் கடந்த 2 முறையும் கவுன்சிலர்கள் யாரும் வராததால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 3வது முறையாக நேற்று தேர்தல் நடந்தது. மறைமுக தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் செய்தனர். மொத்தமுள்ள 18 கவுன்சிலர்களில் திமுக கவுன்சிலர்கள் 12 பேர், காங்கிரஸ் , சுயேl;சை தலா ஒருவர் என மொத்தம் 14 கவுன்சிலர்கள் தேர்தல் நடக்கும் அறைக்கு வந்தனர்.

இதில் 8வது வார்டு திமுக கவுன்சிலரும், பேரூர் திமுக  துணைச்செயலாளருமான ஏ.சி.பழனிச்சாமி துணைத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் தேர்தல் நடத்தும் அலுவலர்  ஏ.சி.பழனிச்சாமி துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். இந்த மறைமுக தேர்தலை அதிமுக கவுன்சிலர்கள் இருவர் மற்றும் 9-வது வார்டு திமுக கவுன்சிலர் செந்தில், சிபிஎம் கவுன்சிலர் கீதாசேகர் ஆகிய 4 பேர் புறக்கணிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.துணைத் தலைவராக ஏ.சி.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மற்றும் கவுன்சிலர்கள், பேரூராட்சி அதிகாரிகள் அவருக்கு பேரூராட்சி மன்ற வளாகத்தில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். ஏ.சி.பழனிச்சாமி, எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலத்திடம் வாழ்த்து பெற்றார்.

Related Stories: